கும்பகோணம், மார்ச். 01 –
இன்று கும்பகோணத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக கட்சியினர் அப்பகுதி மக்களுக்கு பிஸ்கட் மற்றும் சம்சா வழங்கி மிகச்சிற்பாக அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்கள்.
மேலும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் இதுவாகும். இவரது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் கொண்டாங்களை கடந்த வாரமே தொடங்கிவிட்டனர்.
அதன் தொடர்ச்சியாக அவர்கள் இன்று சிறப்பாக கொண்டாட முடிவு செய்து, அதனைத்தொடர்ந்து, கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் மாநகரப் பிரதிநிதி ஸ்நேகம் கமலக்கண்ணன் ஆவின் பாலகம் நடத்தி வரும் அவர், தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வரும் பொது மக்களுக்கு தேனீர் சம்சா ஸ்நாக்ஸ் இலவசமாக வழங்கினார். அதனால் அப்பகுதி மக்கள் அதிகாலை முதல் அப் பாலகத்தில் டீ, சம்சா, ஸ்நாக்ஸ் போன்றவைகளை சாப்பிட்டு தமிழக முதல்வர் நீடூடி வாழ்க என்று வாழ்த்திச் சென்றனர்.


























