மியிலாடுதுறை, மார்ச். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம். மயிலாடுதுறை டி.இ.எல்.சி. நடுநிலை பள்ளியிலிருந்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான மானவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சி தலைவர் பி.வி.மகாபாரதி உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் தற்போது வரை பள்ளி சேர்க்கை 650 புதிய மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், அரசு ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை இல்லம் தோறும் கல்வி என்றும், காலை உணவு, முட்டையுடன் கூடிய மதிய உணவு, சீருடை காலனி, மேலும் உயர்கல்வி படிக்கரு 1000 என உதவி செய்து வருகிறது என்றும். எனவே அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

மேலும், புதிதாக அரசு பள்ளியில் சேர்ந்த மானவ-மாணவிகளுக்கு கீரிடம் சூட்டினர். இந்த நிகழ்வில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் இராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குமு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், நகரமன்ற தலைவர் குண்டாமணி (எ)செல்வராஜ் ஆகியோரும் , ஆசிரிய பெருமக்களும் கலந்துக் கொண்டனர். பேரணி டி.இ.எல்.சி. பள்ளியில் துவங்கி, நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர பூங்காவை சென்றடைந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here