சிவகங்கை, மே. 21 –

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைத் தாலூகா, கண்ணன்குடி பஞ்சாயத்து யூனியனில் உதவிப்பொறியாளராக திருமாறன் பணிப்புரிந்து வருகிறார்.

இந்நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள சுண்டமங்கலம் முதல் தேரளப்பூர் இடையே சாலை அமைக்கும் பணிக்கான மதிப்பீடு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப அனுமதியை பெற்றுத்தர தேரளப்பூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டு வாங்கிய கண்ணன்குடி பஞ்சாயத்து யூனியன் உதவிப் பொறியாளர் திருமாறன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலர்களால் கடந்த மே 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலூகாவில் வசித்து வருபவர் காளியப்பன் என்பவரின் மகன் சுப்பிரமணியன் இவர் தேரளப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

இவர் 2019 – 20 ஆம் ஆண்டு 14 வது நிதிக்குழு மானிய 2 வது தவணைத்தொகையின் கீழ் சாலைப்பணியினை தேரளப்பூர் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கண்டமங்கலம் முதல் தேரளப்பூர் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 13,56,000 மதிப்பீட்டில் பணி மேற்கொள்ள நிர்வாக அனுமதிக்கோரி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஊராட்சி மன்றத் தீர்மான நகலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சார்பில் அனுப்பி வைத்துள்ளார்.

அதனடிப்படையில் கண்டமங்கலம் சாலை முதல் தேரளப்பூர் வரை 1 கி.மீ. தூரம் சாலையமைக்க கண்ணாங்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சமர்பித்த கருத்துருவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஊராட்சிகளின் ஆய்வாளர் கடந்த மார்ச் 23-2022 ஆம் தேதி தேரளப்பூர் ஊராட்சி தலைவரான சுப்பிரமணியத்திற்கு மேற் கண்ட பணியினை செய்ய நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டள்ளது.

அதனடிப்படையில் மேற்கண்ட பணியினை விரைந்து முடிக்க கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் உதவிப்பொறியாளர் திருமாறனை நேரில் சந்தித்து மேற்கண்ட பணிக்கான மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து விரைவில் வழங்க கேட்டுள்ளார்.

அதற்கு திருமாறன் மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்து அதற்கு தொழில் நுட்ப அனுமதி பெற்றத்தர வேண்டு மெனில் ரூ.14 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் சரி சில நாட்கள் கழித்து தங்களை வந்து பார்க்கிறேன் என்று திருமாறனிடம் கூறி விட்டு ஊர் திரும்பிவுள்ளார்.

பின்பு மீண்டும் திருமாறனை கடந்த மே 10-2022 ஆம் தேதியன்று நேரில் சென்று பார்த்து பணிக்கான மதிப்பீட்டு அறிக்கை பற்றிக் கேட்டுள்ளார். தொடந்து திருமாறன் பேசியபணம் பற்றி கேட்டுள்ளார்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என சுப்பிரமணி திருமாறனிடம் தெரிவிக்க மீண்டும் பேரம் பேசப்பாட்டு ரு.7 ஆயிரத்தை தரும்படி கறராக திருமாறன் கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி தற்போது அவ்வளவு பணம் தான்  எடுத்து வரவில்லை எனக்கூறி பணத்துடன் தான் திரும்பி வந்து பார்ப்பாதாக கூறிவிட்டு ஊர் திரும்பிவுள்ளார்.

இது தொடர்பாக அவருக்கு பணம் கொடுத்து பணியை முடிக்க மனமில்லாமல் தேளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் சிவகங்கை பிரிவு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் இதுக் குறித்து புகார் தெரிவித்து லஞ்சம் கேட்ட உதவிப்பொறியாளர் திருமாறன் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருமாறனை பொறிவைத்து பிடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்கள் கடந்த மே 18 ஆம் தேதி தேளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியத்திடம் இருந்து ரூ. 7 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டு வாங்கும் போது கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here