கும்பகோணம், ஏப். 23 –
அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்கள், அவற்றை தயக்கம் இன்றி சந்திக்கவும், வாழ்க்கையில் நல்ல ஒழுக்கங்களை கற்றுத்தந்த பெற்றோரின் அன்பும், ஆசியும் எப்போதும் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், மாதா பிதா குரு என பெற்றோர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள ஒழுக்கங்களையும் நல்ல பண்புகளையும் கல்வியையும், கற்றுத்தந்த குருவை எப்போதும் மதித்து நடக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் அவர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களிடம் ஆசிப்பெற்ற நிகழ்ச்சி கும்பகோணம் காரத்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று, தங்களது பெற்றோருக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், பாதங்களை தண்ணீரில் கழுவி புனிதப்படுத்தி, சந்தன குங்கும பொட்டு வைத்து, உதிரி பூக்களால் பூஜித்தனர், தொடர்ந்து பெற்றோர்கள் பாத பூஜை செய்த தங்களது குழந்தைகளுக்கு, சந்தன குங்கும பொட்டு வைத்தும், மங்கல அட்சதைகள் மற்றும் உதிரி மலர்களை தூவியும், எல்லாவற்றிலும் அவர்கள் வெற்றி காண வேண்டி ஆசிர்வதித்தனர். இந்நிகழ்வில் பெற்றோர், ஆசிரிய பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.





















