சென்னை, ஜன. 3 –

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட ஆசாமிகள் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியரை கை, கால்களை கட்டி போட்டு விட்டு கவுண்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்தி 32 ஆயிரத்து 500-யை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு அதிகாலை முதல் ரயிலில் பயனம் செய்ய வழக்கம் போல் வந்த பயணிகள் டிக்கெட் கவுண்டர் மூடியிருந்ததால் அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் போலீசாரிடம் பயணிகள் தகவல் தெரிவித்தனர்.

ரயில்வே போலீசார் பயனிகளுடன் வந்து பார்த்தபோது உள்ளே எந்த ஒரு ஆள் நடமாட்டம் தென்படாததாலும், உள்ளே பூட்டி இருந்ததாலும் ஒரு பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது டிக்கெட் கவுண்டரில் இருந்த ரயில்வே ஊழியர் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை மீட்டு ரயில்வே போலீசார் அவருக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது மூன்று நபர்கள் வந்து துப்பாக்கி முனையில் மிரட்டி தன்னை கட்டிப்போட்டு விட்டு அடித்து டிக்கெட் கவுண்டரில் இருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான பணத்தை கொள்ளை அடித்து சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். டிக்கெட் கவுண்டரில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் பாதிக்கப்பட்ட ஊழியர் டிக்காராம்  புகார் கொடுத்துள்ளார்.

புகாரை தொடர்ந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வரவைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். சென்னை டைடல் பார்க் சிக்னல் எப்போதும் ஆள் நடமாட்டம் காணப்படும். ஓஎம்ஆர் சாலை ஒட்டியுள்ள திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துணிச்சலாக மூன்று பேர் புகுந்து டிக்கெட் கவுண்டரில் இருந்த ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டி அடித்து கை கால்களை கட்டி போட்டு விட்டு கவுண்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேலான பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ரயில்வே துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டைடல் பார்க் சிக்னல் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், ரயில்நிலையத்தில் பொருத்தி உள்ள சிசிடிவி கேமராக்களையும் தற்போது ரயில்வே துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் ரயில்வே போலீசார் 392, 353, 442, 342 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ரயில்வே எஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு ஆய்வாளர்கள் வைரவன், ஷாலினி ஆகியோர் இரண்டு குழுக்களாக ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தடையங்களை சேகரித்து வருகின்றனர்.  இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here