ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் கரிய மாணிக்கம் கோயில் அருகில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு பங்கேற்றார்.

ஆவடி, அக். 2 –

அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்

அப்போது பேசிய அவர்,  தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின் போது கொரோனா நிவாரண நிதி மற்றும் தடுப்பூசிகளை தர மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து கேட்டு   வழங்கினார்.

அதே போன்று அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து விட்டு சென்று விட்டனர். இதனால் உரிமைத் தொகையாக மாதம் 1000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கும் திட்டம் தொடங்கப்படவில்லை. விரைவில் அந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. என்றார்.

தற்போது பல்வேறு திட்டங்கள் மூலம் வருவாயை பெருக்கி மக்களுக்கு நல உதவிகளை செய்து வருகிறது.  தேர்தல் அறிக்கையில் கூறியபடி பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு விட்டது. பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரே சுதந்திரமாக அவர்களால் தற்போது வாழ முடிகிறது. இந்த ஆட்சியில் நேரடியாக சுதந்திரம் யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களை தேடி சென்று கொண்டிருக்கிறது.

அனைத்து குடும்பத்தினரையும் தன் குடும்பம் போல பாவித்து நடப்பவர் தான் தலைவர் ஸ்டாலின் அவர்கள். அய்யப்பாக்கத்தில் ஊராட்சியில் பல்வேறு குறைகள் உள்ளதையும்,  அவற்றை நிவர்த்தி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அக் குறைகள் நிவர்த்தி செய்யப்படு்ம் என்று கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள். இதில் மதுரவாயல் சட்ட மன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, அரசு உயர் அலுவலர்கள், ஊராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here