ஆவடி, மே. 11 –
ஆவடி காவல் ஆணையரக சரகத்திற்குள் கொலை மற்றும் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் மூன்று குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பெருநகரம் சென்னை அடுத்துள்ள ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் (வழக்கு) தொடர்ந்து ஈடுபட்டு வந்த சென்னை, திருவள்ளூர் பகுதிகளை சேர்ந்த நாகராஜ் வயது (44) குமார் என்கிற சீசிங் குமார் (54) மற்றும் அருண் என்கிற டூயூக் அருண் வயது (23 ) ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.
மேலும் 3 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மேலும், குற்றங்களை தடுக்கும் வகையில் அவர்கள் மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆவடி மாநகர காவல் ஆணையரக ஆணையர் சந்தீப்ராய் ரத்தூர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர்கள் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.




















