கும்பகோணம், நவ. 27 –

கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில் அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர்கள் சூரியநாராயணன், வைத்தியநாதன்,  மாவட்டப் பொருளாளர் ஸ்ரீதர், கேரளா மாநில பிராமண மகா சபா தலைவர் கரும்புராராமன், அகில கர்நாடகா பிராமண சபா தலைவர் கொளத்தூர் மணி, அகில கர்நாடகா பிராமண சபா மாநில இணைச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும், மத்திய அரசு, பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீட்டை, தமிழகத்திலும் அமல்படுத்திட வேண்டும், மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றிட வேண்டும், ஆகம விதிகளுக்கிணங்க, ஆகம கோயில்களைப் பாதுகாத்திடவும், இதில் அரசு தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், இந்த சமுதாயத்தை குறிவைத்துப் பேசுவதையும், சாடுவதையும் வன்மையாகக் கண்டித்தும், மேலும். சட்ட ரீதியாக பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். தமிழகத்தில் பிராமண சமுக ஏழைகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பில், அபராதம், தாமதக்கட்டணங்கள், பட்டியல் கொடுப்பதில் உள்ள சிறு தவறுகளுக்கான அபராதத் தொகையிலிருந்து விலக்களிக்க வேண்டும். அரசு ஒப்பந்தப் பணிக்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும், கும்பகோணம், மற்றும் பழனியையும் தனி வருவாய் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு உ.வே.சாமிநாதய்யர் பெயரையும், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு சர்.சி.வி.ராமன் பெயரையும், சென்னை இந்தியத் தொழில் நுட்பகழகத்திற்கு கணித மேதை ராமானுஜர் பெயரையும், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதி பெயர்களை சூட்ட வேண்டும், கும்பகோணம் மகாமக நிகழ்ச்சியைத் தேசிய நிகழ்ச்சியாக அறிவித்து, அதற்குண்டான அனைத்து கட்டமைப்புகளையும் மத்திய அரசு செய்திட வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிடுவதைக் கைவிட வேண்டும், சனாதன தர்ம உணர்வுகளையும், சமூகத்தையும் இழிவாகப் பேசுவோர், எழுதுவோர், சித்தரிப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here