திருவேற்காடு, ஏப். 10 –
கோவில் நகரமான திருவேற்காடு நகரப் பகுதியில் குவிந்துக்கிடந்த சுமார் பத்து டன் கழிவுக்குப்பைகளை தூய்மை பணியாளர்களுடன் இனைந்து அந்நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள்.
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மாஸ் கிளீனிங் என்ற திட்டத்தின் கீழ், அப்பகுதியைச் சுத்தம் செய்யும் துப்புரவு பணி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை முன்னிட்டு, திருவேற்காடு நகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பணி நடைபெற்று வருகின்றது. முன்னதாக திருவேற்காடு 16-வது வார்டு பகுதியில் இந்த திட்டத்தை நகர்மன்ற தலைவர் என் ஈ கே.மூர்த்தி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து இந்தப் பகுதியில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், ஜே சி பி எந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஒரே நாளில் முக்கிய வீதிகள், காலி மனைகள், மைதானங்கள் உள்ளிட்ட பகுதியில் தேங்கியிருந்த ஒட்டு மொத்த கழிவுக்குப்பைகளை, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அதனைத்தொடர்ந்து, துப்புரவு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுடன் இனைந்து நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ரமேஷ் ,சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் குறித்து உறுதி மொழி ஏற்றனர்.
மேலும் இதுக்குறித்து நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி தெரிவிக்கும் போது, இந்நகராட்சிக்கு உட்பட்ட 30 இடங்களில் அதிக அளவில் குப்பை உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்விடங்களில் உள்ள குப்பைகள் அனைத்தும் ஒரு வார காலத்தில் முற்றிலும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவும், மேலும் குப்பை அகற்றப்படும் பகுதிகள் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், மீண்டும் குப்பைகள் சேராதவாறு கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். என அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 30 முதல் 40 டன் வரை திடக்கழிவுகள் அகற்றப்பட உள்ளன. நகராட்சி பகுதிக்குள் வசிக்கும் மக்கள் குப்பைகள் தேங்காதவாறு நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து குப்பையில்லா திருவேற்காடு நகரம் என்ற நிலையை ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு அப்போது வேண்கோள் விடுத்தார்.






















