திருவேற்காடு, ஆக. 27 –
திருவேற்காட்டில் மாதரவேடு கூட்டுறவு குடியிருப்போர் நலச்சங்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோயில் ஆலயத்தின் அஷ்டபந்தன ராஜகோபுர கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக அபிஷேகம் யாக பூஜைகள் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக பூவிருந்தவல்லி காவல்துறை துணை ஆணையர், திருவேற்காடு காவல்துறை ஆய்வாளர், திரைப்பட இயக்குனர் கௌதம் பங்கேற்றனர். மேலும் விழா குழுவினர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான பக்தர்களும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பக்தி பரவேசம் கொண்டனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் தெளிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்த கோடிகள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து காவல் துறையினரின் அறிவுறுத்தளினை ஏற்று ஒவ்வொருவராக வரிசையில் நின்று வழிபட்டனர் ஆலய மற்றும் விழாக்குழுவினர் லயன் பால் தினகரன் திருவேற்காடு முன்னாள் நகர மன்ற தலைவர் பிரபு கஜேந்திரன் ட குமார் என் இ கே மூர்த்தி திமுக நகர செயலாளர் விழாக் குழுவினர் டில்லி பாபு சிவக்குமார் பழனி ஆர் .ஷல்லி தொழிலதிபர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு வழிபட்டனர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது