பொன்னேரி, ஏப். 12 –

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுசெயலாளர் டி. டி. வி .தினகரன்  தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்களுக்கு, சொத்து வரியை ஏற்றிய திமுக அரசை கண்டித்து தெருமுனை கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பித்ததிருந்தார். அதனடிப்படையில் தமிழகமேங்கும் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன அதேப் போன்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி அண்ணா சிலை அருகே மாவட்ட அமமுக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர்ராஜா தலைமையில் தமிழக அரசை கண்டித்து தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் முனுசாமி பாண்டியன் கலந்துகொண்டு, சொத்து வரியை 150 சதவீதத்திற்கு மேல் உயர்த்திய திமுக அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொகுதி ஒன்றியம் பேரூராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here