திருத்துறைப்பூண்டி, ஏப். 21 –

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், தண்டலைச்சேரியில் 63 நாயன்மார்களில் அரிவாட்ட நாயனார் அவதார-முக்தி ஸ்தலமும் ஸ்ரீ நீணெறிநாதர் – ஞானம்பிகை உடனுறை புகழ் பெற்ற திருக்கோவில் அமைந்துள்ளது.

இத் திருக்கோவிலுக்கு அறங்காவலர் பொறுப்புக்கு அறநிலை துறையின் மூலம் விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலைய துறையால் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், அறப்பணி செய்யும் பலரும் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் இந்நிலையில் ஆளும் கட்சியினர் ஆதரவுடன் செயல்படும் திமுக கிளைச் செயலாளர் பருத்திச்சேரியை சேர்ந்த ரெங்கநாதனும் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் ரங்கநாதனுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் *பருத்திச்சேரியில் ஸ்ரீ நீணெறிநாத சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 24 சென்ட் காலி புஞ்சை மனையை தனது தந்தை ராகவன் பெயரில் கோவிலுக்கு பகுதி கட்டி வந்த நிலையில், அவ்விடத்தை, அத்திருக்கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் ரெங்கநாதன் விற்பனை செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போது அவ்விடத்தில் வேறு நபர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேற்படி கோவில் மனைக்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய பகுதி தொகையும் செலுத்தாமல் நிலுவையில் இருக்கும் நிலையில், எந்த கோவில் சொத்தை உள் விற்பனை செய்துள்ளாரோ அதே கோவிலுக்கு ரங்கநாதன் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பது, தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், கிராம கோவிலான. தண்டலைச்சேரிக்கும், பருத்திச்சேரிக்கும் பொதுவாக உள்ள குளுந்தமா காளியம்மன் கிராம கோவிலுக்கு கும்பாபிஷேக செய்ததில் முறைகேடு செய்துள்ளதாகவும், மேலும் அவ்வாலயத்தை கடந்த 25 ஆண்டுகளாக நிர்வாகித்து வந்த அவர், இதுவரை அவ்வாலயத்தின்  வரவு- செலவு கணக்கினை இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ரங்கநாதன் திமுகவின் கிளை செயலாளராகவும் உள்ளார் எனவும், அதன் மூலம் திமுக பொறுப்பாளர்கள் ஒப்புதலோடு மீண்டும் நம்மால் ஆலய அறங்காவலர் பணிக்கு தேர்வு  செய்யப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையோடு  இருந்து வருகிறார் எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்பொழுது அறநிலைத்துறைக்கு சொந்தமான நீணெறிநாதர் ஆலய திருப்பணி பணிக்கு ஊழல் அற்ற நிர்வாக திறமை உடைய அறங்காவலர்களை கிராம மக்கள் ஒப்புதலோடு கிராம நிர்வாக பொறுப்பாளர்கள் முன்னிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேர்வு செய்து திருப்பணி பணிகளை தொடங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கும் இந்து சமயம் அறநிலையத்துறைக்கும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here