தஞ்சாவூர், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள், வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுங்கள் என எழுதப்பட்ட பலகையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆணையர் மகேஷ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.
பின்னர் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதில் தப்பாட்டம் மற்றும் மயிலாட்ட கலைஞர்கள் இசைத்தப்படியும் ஆடியப்படியும் வர அதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவறு வாக்களர்களிடையை விழிப்புணர்வை ஏட்படுத்தியவாறு பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.




















