பாபநாசம், ஏப். 21 –

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் அப்பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலும் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மருத்துவர்களின் ஆலோசனைப் படி, தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரவலை தடுப்பதற்காகவும் மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுக்கும் நோக்குடனும்  பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் வட்டசட்டப்பணிகள் குழு சார்பில் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  நீதிபதி அப்துல் கனி கலந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்,மேலும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களும். மேலும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் என திரளானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here