பாபநாசம், ஏப். 21 –
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சாவடி மையங்களில் கட்சி நிர்வாகிகளை நியமித்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக போட்டியிட்டாலும் அல்லது காங்கிரஸ் போட்டியிட்டாலும் ஒற்றுமையுடன் சேர்ந்து வெற்றிக்கு அயராது தொண்டர்கள் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அக்கூட்டத்தில் வட்டாரத் தலைவர்கள், நகரத்தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




















