திருவாரூர், ஜூலை. 29 –

திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடை வீதிப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சினையை தலையிடாமலும், மேலும் அதுப்பற்றி சிறிதும் பிரதமர் மோடி கவலைப்படாமல் இருப்பதாக அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதமருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும் அம்மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பா.ஜ.க ஆட்சியையும் பதவி நீக்கம் செய்திடும் படியும் முழக்கம் எழுப்பினார்கள். மேலும்,  இக்கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் என். இடும்பையன் தலைமையிலும்,  நகரச்செயலாளர் ராஜசேகர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், பா.கோமதி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிவேல் நகரச் செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்டவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசு, பிரதமர் மோடி மற்றும் மணிப்பூர் மாநில  அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here