ஊத்துக்கோட்டை, ஆக. 22 –

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி  தொகுதிக்குட்பட்ட  ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு  492 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜே மூர்த்தி,  பேரூராட்சி தலைவர்  அப்துல் ரஷீத்,  துணைத் தலைவர் குமரவேல் மற்றும் தலைமை ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக  ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  உள்ளாட்சி அமைப்பு தேர்தலில்  வெற்றி பெற்ற உறுப்பினர்களின்  பெயர் பலகையை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here