சென்னை, ஜன. 10 –
இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைப்பெற்ற கூட்டத்தில் மறைந்த தமிழறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் முனைவர் ஔவை நடராஜன், ஓவியரும் மற்றும் எழுத்தாளருமான மனோகர்தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் மருத்துவர் டி.மஸ்தான், கால் பந்து விளையாட்டு வீரர் பீலே, சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.















