ராமநாதபுரம், அக். 5 –
உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் உள்பட 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மலேசியா பாண்டி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, முதுகுளத்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மலேசியா பாண்டி, இந்திய கம்யூ மாவட்ட செயலாளர் முருகபூபதி, பொருளாளர் ராஜாராம் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் பேசினர். நகர் தலைவர்கள் கோபி, அஜ்மல் கான், மாவட்ட துணை தலைவர்கள் சோபா ரங்கநாதன், துல்கீப், முத்துகிருஷ்ணன், கோட்டை முத்து, வாணி இப்ராஹீம், மாவட்ட மகளிரணி தலைவி ராஜலட்சுமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், பாஸ்கர சேதுபதி, கோதண்டராமன், மாநில பேச்சாளர் மாலங்குடி விஜயன், மண்டபம் மேற்கு வட்டார தலைவர் அன்வரலி நத்தார், மாநில பேச்சாளர் ஆலம், வட்டாரத்தலைவர்கள் சேதுபாண்டியன், கந்தசாமி, முனீஸ்வரன், தனசேகரன், கணேசன், சுரேஷ் காந்தி, கார்மேகம், மாநில செயற்குழு பாரிராஜன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஹாஜா, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், நகர் துணை தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.