காஞ்சிபுரம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வழக்கத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு, நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
முன்னதாக நேற்று எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அவ்வழக்கு தொடர்பாக நேற்று முன் தினம் எஸ் வி சேகர் மீது சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் அத் தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வழக்கு பத்திரத்துடன் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வழக்கத்தீஸ்வரர் கோவிலுக்கு எஸ்வி சேகர் வருகை தந்து சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து வழிபட்டார். என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த எஸ் வி சேகர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதுசு, அவர் போலீஸ்காரர் என்பதால் காவல் நிலையத்தை போன்று கட்சியை நடத்துகிறார். மேலும் திருடர்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிவார்கள் நல்லவர்கள் எப்போதும் அவர் கண்ணுக்கு தென்படமாட்டார்கள், எனவும், மேலும் பிரதமர் மோடியின் திட்டங்களை தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை எடுத்து செல்ல அண்ணாமலை தவறிவிட்டார் என்றார் எஸ்.வி.சேகர்.
பொதுவாக எப்போதும் ஒரு கட்சித் தலைவர் தமக்குத்தானே பேசிக் கொள்ளக் கூடாது அதில் எந்த மாற்றமும் வராது, புதிதாக ஒருவரிடம் பேசி பழக வேண்டும், அண்ணாமலைக்கு வாய் மட்டும்தான் வேலை செய்கிறது என்றால் சரியா இருக்காது,
மேலும் அண்ணாமலை ஆரம்பத்திலிருந்து புத்திசாலித்தனமான ஆள் தான்தான் எனவும், சிறந்தஆள் தான்தான் எனவும், அவரை போற்றி பேசுகின்ற ஆட்களை மட்டுமே காசு கொடுத்து உடன் வைத்திருக்கிறார்
ஒரு கட்சித் தலைவர் என்பவர் தகுதியான ஆட்களை வைத்து பணி வாங்க வேண்டும் அதுதான் நிர்வாக திறமை அனைத்தும் அண்ணாமலையே செய்ய வேண்டும் என நினைத்தால் நிர்வாகத்தில் அவர் பூஜியமாகத்தான் இருப்பார் இருப்பவர் என்றார்.
நடிகர் விஜய் வலுவான அடித்தளத்தோடுதான் அரசியலுக்கு வருகிறார், முதன் முதலில் அரசியலுக்கு வரும் போது கட்சி பெயர் வெளியிட்ட போது வாழ்த்து தெரிவித்ததோடு கட்சிப் பெயரில் ‘ க் ‘ இருக்கா இல்லையா என கேட்ட பொழுது தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ளும் பண்பு இருப்பதால் நிச்சயம் அவர் அரசியலில் வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது எனவும்,
மேலும் அவர் ஜோசப் விஜய் என்று சொல்லக்கூடாது என்பவர்களுக்கு தான் சொல்லவிரும்புவது, ஜனநாயக தேர்தலில் யார் வேண்டுமானாலும் மதம் பாகுபாடு இன்றி போட்டியிடலாம் என்றார்.
மேலும் நடிகர் விஜய் 2026 தேர்தலை மட்டுமே சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். அவர் கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டியது உள்ளதால் அதற்காக பணிகளை முன்னெடுக்கிறார் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் விஜய் அதிக இளைஞர் பட்டாளம் கொண்டவர் அதனால் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா என்பது தேர்தலுக்கு பின்புதான் தெரியும் என அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்





















