காஞ்சிபுரம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திரபிரப நாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது.
சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சமணர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் பலர் தினமும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், மேல்சித்தாமூர் ஜின காஞ்சி மடம் மற்றும் திருமலை அரகந்தகிரி திகம்பர ஜெயின் மடத்தின் மடாதிபதி்களின் அருளாசியுடன் மஹாவீரர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
அதில் மண்டகபடி மற்றும் சிறப்பு ஆராதனையும், தொடர்ந்து கோவிலில் இருந்து பகவானின் ஜின காஞ்சி திருவீதி உலா இரவு துவங்கியது. இதில், மேள தாளங்கள் முழங்க,கோலாட்டம் ஆடியபடி முன்னே செல்ல, மலர்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மஹாவீரர், திருப்பருத்திக்குன்றம் மாட வீதி, கலெக்ட்ரேட் வழியாக மேட்டுத்தெரு ஜினாலயம், காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், காவலான்கேட், வந்தவாசி சாலை, வேதாச்சலம் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வழி யாக பவனி வந்தார்.




















