தஞ்சாவூர், ஏப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி கடுமையான வெப்ப சூழ்நிலையை விட கொடுமையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனவும், டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் இன்று நடந்த தீ விபத்து ஜனநாயகத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றத்தை அணைப்பதற்காக, பாதுகாப்பதற்காக செய்ததா? பேராவூரணியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பிவுள்ளனர். மேலும் இந்திய ஜனநாயகம் மரணப்படுக்கையில் அதாவது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது எனவும் மேலும் முடிந்துபோன பிறகு வெண்டிலேட்டரில் வைத்து காப்பாற்றிக் கொண்டிருக்கக்கூடிய முறையை போன்றவர் மோடி எனவும் மேலும் மோடி மீது கி.வீரமணி கடும் தாக்குதலை தொடுத்துவுள்ளார். மேலும் ஜூன் 5-ம் தேதி மோடிக்கு விடை கொடுத்து அனுப்பவேண்டிய நாள் எனவும் இது கருத்து கணிப்பு அல்ல, மக்கள் கணிப்பு என தஞ்சாவூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்தியா கூட்டணி தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று இரவு பேராவூரணியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உறுதி செய்யப்பட்ட வெற்றி. கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி கடுமையான வெப்ப சூழ்நிலையைவிட கொடுமையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். நிச்சயம் தெளிவாக தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் வரப்போகிறது என்பதை தாண்டி மற்ற மாநிலங்களிலிருந்து வரக்கூடிய செய்திகளை பார்க்கப் போனால் தென் மாநிலங்களானாலும், வட மாநிலங்களானாலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மோடிக்கு எதிரான அலைதான் வீசுகிறது.

வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் ஒரு புதிய ஆட்சி இந்தியா கூட்டணியின் ஆட்சி நிச்சயம் உருவாகும் என்பதில் ஏராளமான தகவல்கள், தரவுகள் தெரிவிக்கின்றன. டெல்லியில் உள்துறை அலுவலகத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுவாக ஒரு தேர்தல் நடக்கின்ற நேரத்தில், ஆட்சி மாற்றம் என்ற வலுவான செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் இவ்வளவு பாதுகாப்பு நிறைந்த இடத்திலேயே இப்படி தீ விபத்து ஏற்படுகிறது என்றால் இது முக்கியமான மில்லியன் டாலர் கேள்வியாகும். குறிப்பாக முக்கியமான தஸ்தாவேஸ்துகள் எரிந்திருக்கிறக்கூடிய ஒரு வாய்ப்புண்டு என்ற செய்தியை நான் ஊடகத்தின் வாயிலாக பார்த்தேன். எனவே இது குறித்து போதிய சுதந்திரமான, தெளிவான விசாரணையும், செய்தியும் வர வேண்டும். காற்றுவாக்கில் வரக்கூடியது அல்ல. ஒருவேளை ஜனநாயகத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றத்தை அணைப்பதற்காக, பாதுகாப்பதற்காக செய்ததா? இதற்கு முன்பு இது போன்று பல இடங்களில் நடந்த வரலாறுகள் உண்டு என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக முதல்வர் தெளிவாக கூறியிருக்கிறார். பிரதமர் முகம் என்பது இந்தியா கூட்டணியின் முகம் என்று. இது ஆர்.எஸ்.எஸ்.க்கே முன்மாதிரி என்று தெளிவாக கூறியிருக்கிறார். இந்தியாவை காப்பாற்றுவதற்கு ஸ்டாலின், ராகுல்காந்தி என்ற இரண்டு மருத்துவர்கள் உள்ளனர் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

இந்திய ஜனநாயகம் மரணப் படுக்கையில் அதாவது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. அதற்கு போதுமான அளவு ஜனநாயக மருந்துகளை கொடுக்க வேண்டும். அந்த சக்தி, ஆற்றல் மக்கள் சக்தியாக இருக்க வேண்டும். அந்த மக்கள் சக்தியை திரட்டி மக்கள் மத்தியில் அபரிகரமான செல்வாக்கைப் பெற்ற இரண்டு இளம் தலைவர்கள் என்று சொன்னால் ஒன்று ஒப்பற்ற முதல்வர் ஸ்டாலின். இன்னொருவர் இளம் தலைவர், துடிப்போடு செயல்படக்கூடிய, இந்தியா முழுவதும் மக்களை ஈர்த்திருக்கக்கூடிய  ராகுல்காந்தி எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஆனால் மோடி போன்ற டாக்டர்கள் எப்படி என்று சொன்னால் முடிந்துபோன பிறகு வெண்டிலேட்டரில் வைத்து காப்பாற்றிக் கொண்டிருக்கக்கூடிய முறையை போன்று. இது முடிவுக்கு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள் என்றார்.

இந்திய நாட்டின் பிரதமர் மோடி ஒன்பதாவது முறையாக தமிழகத்திற்கு வருகை தந்தார். இதுவரை அவருடைய அரசியல் வாழ்வில் கடைந்தெடுத்த பொய்களையே சொல்லி பழக்கப்பட்டவர் ஒரே ஒரு முறைதான் அதுவும் தமிழ்நாட்டில் நெல்லையில் ஒரே ஒரு உண்மையை சொல்லியிருக்கிறார். அந்த உண்மை என்னவென்றால் நான் தமிழ்நாட்டிற்கு தேர்தல் ரீதியாக வருவது இதுதான் கடைசி தேர்தல் பயணம் என்று. அவர் வருவது கடைசி என்றால் அவருடைய கட்சியும் ஆட்சிக்கு வருவது என்பதும் சேர்த்துதான் என்பதுதான் அதன் பொருள் என்றார்.

அவர் தேர்தல் வாக்குறுதியாக மோடிக்கீ சர்க்கார் கேரண்டி என்று. நிச்சயமாக ஜூன் 5-ம் தேதி மோடிக்கு விடை கொடுத்து அனுப்பவேண்டிய நாள். புதிய இந்தியா கூட்டணி அரசை மக்கள் சந்திப்பார்கள். இது கருத்து கணிப்பு அல்ல. மக்கள் கணிப்பு என்றார். இந்த சந்திப்பின் போது பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பேட்டி. கி வீரமணி – திராவிடர் கழகத் தலைவர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here