ராமநாதபுரம், ஆக. 19-
ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பாத்திமா கேட்டரிங் கல்லுாரியில் தாய்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் குழந்தைகளுக்கு தாய் பால் வழங்குவதின் அவசியம் குறித்து உளவியியல், நியூட்ரிசியன், மைக்ரோ பயோலஜி ஆசிரியர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.

ராமநாதபுரம் ஜாஸ் மற்றும் பாத்திமா கேட்டரிங் கல்லுாரி வளாகத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தாய்ப்பால் வாரவிழா நடந்தது. விழாவில் அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் முகம்மது சலாவுதீன் தலைமை வகித்தார். ஆசிரியர் துர்காதேவி வரவேற்றார். தாய்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உளவியியல் ஆசிரியர் பத்மாவதி பேசும் போது, தாய் பால் கொடுப்பதன் மூலம் அரவணைப்பின் காரணமாக மனரீதியாக தாய் மற்றும் குழந்தைக்கு ஆரோக்கியமான நிலை உருவாகும், என்றார்.
நியூட்ரிசியன் ஆசிரியர் விமலா பேசும் போது, குழந்தைகளுக்கு தாய்பால் எதிர்ப்பு சக்தியை அதிகம் தருகிறது. சத்தான உணவு தாய் பாலாகும். குழந்தை பிறந்து 2 மணி நேரத்திற்குள் தாய் பால் அவசியம் கொடுக்க வேண்டும், என்றார். மைக்ரோ பயாலஜி ஆசிரியர் விஜயகுமாரி பேசும் போது, தாய் பாலில் சீம்பாலானது  அதிகப் படியான சத்து உள்ளது. சீம்பால் கொடுப்பது குழந்தைக்கு மிகவும் நல்லது. தாய் பால் கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்கும் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். தாய் பாலை விட சிறந்த உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது, என்றார். இந் நிகழ்ச்சியில் மாணவிகள் பலர் பங்கேற்றனர்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here