கும்பகோணம், மார்ச். 11 –

கும்பகோணத்தில் உள்ள எஸ். இ. டி. எனும் தனியார் திருமண மண்டபத்தில், இன்று எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பதுக் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சக்தி கேந்திர  பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறுப்பாளார்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் அவர்களுக்கு எதிர் வரும் 2024 நாடளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொண்டு அக்கட்சி அணியின் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும், மேலும் அதுக்குறித் குறித்த தகுந்த ஆலோசனைகளையும் அப்போது அவர்  வழங்கினார்.

கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன்,

தெரிவிக்கும் போது, தமிழகத்தில் நாள்தோறும் திட்டமிட்ட கொலைகள் அதிகரித்து வருகிறது எனவும், மேலும், மாணவனே மற்றொரு மாணவனை கொலை செய்யும் அவலமும், ஆசிரியர் மாறுதலுக்காக மாணவர்கள் போராடுவதும் இதுவரை தமிழகத்தில் இல்லாத மாற்றமாகவுள்ளது, எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தை ஆளும் திமுக அரசு, சரியாக நிர்வாகம் செய்யாவிட்டால், சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு போகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்.

இந்நிலை தமிழகத்திற்கு உகந்ததல்ல எனவும் அப்போது குற்றம்சாட்டிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி குறித்து இரு கட்சிகளுமே தனித்தனியாக தெளிவுப்படுத்தி விட்டது என்றும், மேலும், சமீப நாட்களாக பாஜக, அதிமுக கருத்து மோதல்கள் குறித்த கேள்விக்கு, கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இந்த உலகில் இல்லை என அப்போது அவர் தெரிவித்ததுடன், எடப்பாடி பழனிச்சாமி, புகைப்படங்களை பாஜகவினர் தீயிட்டு எரித்த சம்பவங்கள் குறித்து கேள்விக்கு, கடந்த காலம் குறித்து பேசுவது முறையாக இருக்காது என தவிர்த்த அவர், அதிமுக அணிகள் இணைவது குறித்து அந்த கட்சியினர் கவனித்துக் கொள்வார்கள் என்றும் அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவிற்கு சென்றவர்கள் பற்றிய கேள்விக்கு, ஒவ்வொரு கட்சியிலும், அதில் இருப்பவர்கள் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள், சில சமயங்களில் கருத்து வேறுபாடு காரணமாக மற்றொரு கட்சிக்கு அவர்கள் செல்வது தவிர்க்க முடியாதது எனவும் இது பல கட்சிகளில் நடந்து வருகிறது எனவும் மேலும்  இது ஒன்றும் புதிதல்ல, எனத்தெரிவித்தார்.

மேலும், தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது, தமிழகத்தில், இந்த கூட்டணி யாருடைய தலைமையில் இயங்கும் என்பது குறித்து பாஜகவின் தேசிய தலைமையும், மாநில நிர்வாகமும் முடிவு செய்யும் என்றும், தேர்தலில் ஒவ்வொரு கட்சியும், அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்று தான் விரும்பும் அதுபோல தான் நாங்களும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் திரு. பொன் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here