செங்கல்பட்டு. செப் 8 –
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை சிறப்பு மாநாடு செங்கல்பட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஐந்து கோரிக்கைகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழக அரசு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டியும், அரசு ஊழியர்களை போல அகவிலைப்படி வழங்க கோரியும், குடும்ப ஓய்வூதியம் இலவச மருத்துவ காப்பீடு வசதி உள்ளிட்டவற்றை வழங்கிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை சமூக நல ஆணையரகம் முன்பு வயதான ஊழியர்கள் ஊன்று கோலுடன் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.