வத்தலக்குண்டு, ஆக, 19- அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வை வழியுறுத்தி இருசக்கர மோட்டார் வாகன பேரணி மற்றும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது
ஹெல்மெட் அணிந்து அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்று இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்துக் கொண்டனர். இந்த பேரணியில் காவல்துறை சார்பில் தலைக் கவசம் அணிவதினால் அதன் நன்மைகள், மற்றும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் இருந்து உயிர்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தலைக்கவசம் அணிந்த இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு வாகன பேரணியினை தொடர்ந்து பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி கிராமத்தில் அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட பொறுப்பாளர் M. முத்துபாண்டி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியினை சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் இரா. பாலசந்திரன், தேசிய செயலாளர் டாக்டர் அ.செ.புகழேந்தி ஆகியோர் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர். இந் நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மேலாளர் ஜான் உதயகுமார், வெள்ளாளர் உறவின் முறை தலைவர் அ.ஆறுமுகம், வெ.உ.மு.செயலாளர் P.கணேசன், வெ.உ.மு. பொருளாளர் K.P.முத்துராமலிங்கம் , P.பாலசுப்ரமணி, சு.மணியரசன், T. பிச்சைமணி , அ.இ.இ.வ.ச திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அந்தோணி விவேக் மற்றும் ராஜசேகர், விஜயராகவன், சின்னத்துரை, M.ராதா, Ex. Army R. ராதாகிருஷ்ணன் , தேனி மாவட்ட துணை தலைவர் வைத்தியர் P.ஜெயராஜ், வரதராஜன் , பரமசிவம் மற்றும் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.