பொன்னேரி, ஜூன். 10 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகம்மது நபிகளின் மீதான அவதூறு பேசிய பாரதிய ஐனதா கட்சியினர் நூபுர் சர்மா. மற்றும் நவின் ஜிந்தா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் நாடுமுழுவதும் இஸ்லாமியர்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதன் பகுதியாக இன்று பென்னேரியில் அனைத்து இஸ்லாமி இயக்கங்ஙள் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் .இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ, மற்றும் த.மு.மு.க கட்சி பொன்னேரி அனைத்து ஜமாத்காரர்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் குழு மாவட்ட தலைவர் சேக்முஹமது அனிப். எஸ்டிபிஐ தொகுதி செயலாளர் வீரைஜகீர். தமுமுக மாவட்டதுனைசெயலாளர் யூசூப் அலி.முன்னாள் பொன்னேரி கவுன்சிலர் முகமதுஷகில். வாலாஜாஜாமிய மஸ்ஜித் கபில்நாசர். உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொருப்பாளர்கள் கலந்துக்கொன்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய  பாஜக நிர்வாகிகளையும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத பாரதிய ஜனதா கட்சி யையும் கண்டித்து  கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இறுதியில் முஜிப்பூர்ரகுமான் நன்றி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here