சென்னை, பிப். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக து. ராஜகுமார்..

சென்னை: நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மற்றும் இந்திய  அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் இணைந்து நடத்திய  தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம் அக் கல்லூரி வளாகம் முதல்மாடியில் உள்ள ரூசா அரங்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜோதி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

அச்சிறப்புமிகு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அறிவியல் வல்லுநர் டாக்டர். ஜி.என். ஹரிஹரன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் அவர்கள் தேசிய அறிவியல் தினம் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் கே.பி.ஹிரிவாசன் அனைவரையும் வரவேற்று, வரவேற்புரை நிகழ்த்தினார்.. விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் மஜிதா பர்வீன் நன்றியுரை வழங்கினார்.

தாவரவியல் துறை இணைப் பேராசிரியர்  முனைவர் பேரின்பம்  இந்நிகழ்ச்சியை வெகுச்சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு தேசிய மாணவர் படை மாணவர்கள் சிறப்பான வரவேற்புகளையும் பல்வேறு சாகசங்களையும் நிகழ்த்திக் காட்டி வரவேற்புக் கொடுத்தனர்.

தேசிய மாணவர் படை மாணவர்களை  ‌ அதனுடைய காமண்டரும் தமிழ்த் துறையின் இணைப்பேராசிரியரும் முனைவர் த.புகழேந்தி சிறப்பாக வழிநடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருந்து வந்து டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில் 30 கற்கும் மேற்பட்ட  அறிவியல் சார்ந்தக் கண்டுபிடிப்புகளை கண்காட்சிகளாக‌ வைக்கப்பட்டும்  அது குறித்தான செய்முறைகளையும் பார்வையாளர்களுக்கு விளக்கிக் கூறினர்.

நந்தனம் கல்லூரி இன்று விழா கோலம் கண்டது. மேலும் அச்சிறப்பு மிகு அந் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாணவர்களையும், பேராசிரியர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here