ராமநாதபுரம், மே.8-

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் அருள்வாக்கு மகன் எம்பிகே சிவா பூசாரி 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சக்திவாய்ந்த அமாவாசை தினத்தில் அருள்வாக்கு கூறினார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் துணையுடன் அருள்வாக்கு மகன் எம்பிகே. சிவா பூசாரி ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் கருப்பசாமி அருள்வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். இவரது அருள்வாக்கு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் பக்தர்கள் நுாற்றுகணக்கானோர் வந்து தங்களது குறைகளுக்கு அருள்வாக்கு பூசாரி சிவா மூலம் தகுந்த அருள் பெற்று பிரச்னைகள் தீர்வு கண்டு செல்கின்றனர். குறிப்பாக தை, புரட்டசாமி, சித்திரை மாதங்களில் அருள்வாக்கு பெற வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்த சக்திவாய்ந்த அமாவாசை:

கடந்த 4ம் தேதி வந்த அமாவாசை 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் மிகவும் சக்திவாய்ந்த அமாவாசை. இந்த அமாவாசை சனிக்கிழமை வந்தது மிகவும் சிறப்பாகும். இந்த சிறப்பு வாய்ந்த 5 தலைமுறைக்கு ஒருமுறை வரும் அமாவாசை தினத்தில் கருப்பசாமி அருள்வாக்கு பெறுவதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருள்வாக்கு பூசாரி சிவா பக்தர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் பிரச்னைகளை கருப்பசாமி அருளால் எடுத்துக்கூறி பிரச்னை தீர்க்க தகுந்த வழிமுறைகளை அருள்வாக்கில் கூறினார். 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்த சிறப்பு அமாவாசையின் மற்றொரு சிறப்பு பொதுவாக அமாவாசை தினத்தில் ஒன்று அல்லது 3 முறை மட்டுமே மைத்ர முகூர்த்தம் நேரம் வரும். ஆனால் 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்த சிறப்பு அமாவாசையில் 6 முறை மைத்ர முகூர்த்தம் நேரம் வந்தது. இந்நேரத்தில் எடுத்த காரியம் நிறைவேறும். அதிலும் கருப்பசாமி அருள்கிடைத்து அருள்வாக்கு பெற்றது மிகவும் நன்மை உள்ளதாக இருந்தது என பக்தர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here