ராமநாதபுரம், மே.8-
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வரும் 18ம் தேதி பவுர்ணமி தினத்தில் வனதுர்கா அம்மன் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது.
9 வகையான துர்கை அம்மன்களில் வனதுர்கை அம்மன் மிகவும் சக்திவாய்ந்த துர்கை அம்மனாகும். வனதுர்கைக்கு அரளி மாலை அணிவித்தும் நெய்விளக்கு ஏற்றியும் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது சான்றோர் வாக்கு. ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசாமி ற்றும் ஸ்ரீ பதினாறுபிள்ளை காளி அம்மன் கோயிலில் வனதுர்கை அம்மன் சிலை வரும் 18ம் தேதி பவுர்ணமி தினத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அன்றைய தினத்தில் வேதவிற்பன்னர்கள் சிறப்பு யாகங்கள் நடத்தி வன துர்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்கின்றனர். வடக்கு திசை நோக்கி உள்ள வனதுர்கை அம்மனை தொடர்ந்து 7 வாரம் பூஜை செய்தால் தீராத பிரச்னைகள் நொடியில் தீர்ந்துவிடும். பிரதிஷ்டை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வரும் அருள்வாக்கு பூசாரி  சிவா கூறியதாவது:
திருமண தடை, குழந்தையின்மை, தீராத நோய், தீராத நீண்டநாள் பிரச்னைகள், கணவன் மனைவி பிரச்னைகள், தொழில் அபிவிருத்தி, செய்வினை கோளாறு சரிசெய்தல் போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் வனதுர்கையை வணங்கி விளக்கு ஏற்றினால் போதும் நினைத்த காரியம் நிறைவேறிவிடும். மிகவும் சக்திவாய்ந்த வனதுர்கை அம்மன் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் அன்றைய தினம் பவுர்ணமி என்பதால் கருப்பணசாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கும். பிற்பகல் பகதர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here