காஞ்சிபுரம், பிப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர் அதன் தொடக்கமாக முதற் கட்ட போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தற்காலிக விடுப்பில் உண்ணாவரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் பணியிறக்கம் பெயர் மாற்றம் விதிகள் திருத்தம் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை நடத்த மாநில குழு தீர்மானத்தின் படி இன்று முதல் கட்ட போராட்டம் காஞ்சிபுரம் மாவட்ட சங்க தலைவர் மகாலிங்கம் தலைமையில் துவங்கியது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் லெனின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் அலுவலக வாயிலில் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

இதனை அடுத்து வரும் 22ஆம் தேதி தொடர் பணி புறக்கணிப்பு மற்றும் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி முதல் 14000 வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் நவீன்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கோவர்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அரசு வருவாய் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here