பொன்னேரி, மார்ச். 20 -.
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் பணி மனை திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அத்தேர்தல் பணிமனையை அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ரசக்கரவர்த்தி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், பாஜக நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் இருசப்பன், மாவட்டச் செயலாளர் நந்தன், மாநில ஆன்மீகப்பிரிவு செயலாளர் குமார், அன்பாலயா சிவக்குமார், பரமானந்தம், கோட்டி, கோகுலகிருஷ்ணன், சிவராஜ், சந்திரமௌலி, மகேஸ்வரி, தத்தமஞ்சி செல்வி, மகளிர் அணி தங்கமணி, ராஜினி உள்ளிட்டோர் தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் காமேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் முறையான அனுமதி பெறாமல் தேர்தல் பணி திறக்கப் பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக கட்சி கொடிகள் சாலைகளில் நிறுவப் பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உடனடியாக அலுவலகத்தில் உள்ளவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
அதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் தேர்தல் பிறக்கும் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு வந்த வட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான மதிவாணன் அனுமதி இன்றி தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அப்போது முறைப்படி அனுமதி பெற்றுள்ளதாக பாஜக திறப்பில் தெரிவிக்கப்பட்டவர் நிலையில் அதற்கான அனுமதி சான்றை காட்டுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்கு கூடுதல் காவல் துறையினர் வந்ததைத் தொடர்ந்து, பாஜகவினர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அதனிடையே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு காவல் உதவி ஆணையர் சபாபதி விசாரணை நடத்திய பின்னர் சாலையின் இரு புறமும் நிறுவப்பட்டிருந்த பாஜக கொடிகள் அகற்றினர். அந்நிகழ்ச்சியில் பரணிதரன், சிவகுமார், நடராஜ், பாலாஜி, வேல் மாரியப்பன், பிரசன்னா, அப்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






















