ராமநாதபுரம், மார்ச்
வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்திற்கு தார்மீக பொறுப் பேற்று தமிழகஅரசு  பதவி விலக வேண்டும், என தமுமுக மாநில பொது செயலாளர் சாதிக்பாட்ஷா குரல் எழுப்பி உள்ளார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய காட்டுமிராண்டி ஆட்சி நடைபெற்று வருகிறது. முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்கு எதிரான முறையில் நடைபெறும் ஆட்சியை அகற்ற மனித நேய மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் ஆதரவு அளித்து திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்வதற்கு பாடுபட உள்ளோம். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்கு மமக வீரியத்துடன் களமிறங்கி உள்ளோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. வட மாநிலங்களை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியில் 200 பெண்களை 20க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வன்கொடுமை படுத்தி உள்ளனர். 500க்கும் மேற்பட்ட வீடியோ பரவ செய்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவு கோர்ட்டில் விசாரித்து ஜாமீனில் வெளி வராத வகையில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இதில் அதிமுகவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வன் கொடுமை செயலுக்கு ஆளும் கட்சி தார்மீக பொறுப் பேற்று ஆட்சியிலிருந்து பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பொறுப்பு குழு பட்டாணி மீரான், அப்துல்லா, ரைஸ் இப்ராகிம்,பரக்கத்துல்லா, சகுபர், உமர், சுல்தான்,ல யாசர் அராபத் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here