pic file copy
செங்கம் ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கொட்டக்குளம் வரை 4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இந்த பணிக்கான பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம் ரமேஷ் கோவிந்தன் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகு உதவி பொறியாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், பாசன சங்க தலைவர் ஜெயராமன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா வெங்கடேசன், ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம், எல்ஐசி வேலு உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



















