கும்பகோணம், ஜன. 16 –
கும்பகோணம் மேம்பாலம் இறக்கத்தில் உள்ள நீடாமங்கலம் மெயின் சாலையைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் உச்சாணி என்கிற விமல் இவர் மீது கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் கொலை வழக்குகள் உள்ளதாக தெரிய வருகிறது.
கொலை செய்யப்பட்ட உச்சாணி என்கிற விமல் நேற்றிரவு (ஜன 15 -2022 அன்று ) வீட்டின் அருகே உள்ள ஓட்டல் முன்பு கரும்பு சாப்பிட்டு கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் மற்றும் திருவிடைமருதூர் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து, கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இக்கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யாரென தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















