மேலும் அந் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவண்ணாமலை, அக். 17 –
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வேங்கிக்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்விளக்குகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காகவும், மேலும் 60 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையினையையும், மின்வாரியத்துறையில் பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் 11 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினையையும்;, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் .எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வேங்கிக்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்விளக்குகள் பொது மக்களின் பயன்பாட்டிற்காகவும், மேலும் 60 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையினையையும், மின்வாரியத்துறையில் பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் 11 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினையையும்;, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் எ.வ.வேலு நேற்று (16.10.2021) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் விவசாயத்துறை மானியக் கோரிக்கையில் 1 இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில், நேற்று (16.10.2021) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகத்தின் மூலம் 60 பயனாளிகளுக்கு மின் இணைப்பிற்கான ஆணையினையையும் மற்றும் 11 நபர்களுக்கு மின்வாரியத்துறையின் மூலம் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையையும் .எ.வ.வேலு நேற்று (16.10.2021) வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேங்கிக்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கினை பொது மக்களின் பயன்பாட்டிற்காக எ.வ.வேலு அவர்கள் நேற்று (16.10.2021) தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் விவசாய மான்யக் கோரிக்கை கீழ் அறிவித்த 1 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அறிவித்ததை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை வட்டாரத்தில் 4 பயனாளிகளுக்கும், துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் 1 நபருக்கும், ஆரணி வட்டாரத்தில் 2 பயனாளிகளுக்கும், மேற்கு ஆரணியில் 3 பயனாளிகளுக்கும், சேத்பட்டு வட்டாரத்தில் 5 பயனாளிகளுக்கும், செய்யார் வட்டாரத்தில் 2 பயனாளிகளுக்கும், வெம்பாக்கம் வட்டாரத்தில் 6 பயனாளிகளுக்கும், போளுர் வட்டாரத்தில் 8 பயனாளிகளுக்கும், கலசபாக்கம் வட்டாரத்தில் 3 பயனாளிகளுக்கும், ஜமுனாமரத்தூர் வட்டாரத்தில் 10 பயனாளிகளுக்கும், செங்கம் வட்டாரத்தில் 4 பயனாளிகளுக்கும், புதுப்பாளையம் வட்டாரத்தில் 3 பயனாளிகளுக்கும், தௌ;ளார் வட்டாரத்தில் 7 பயனாளிகளுக்கும், வந்தவாசி வட்டாரத்தில் 2 பயனாளிகளுக்கும் இன்று முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கு அமைச்சர் மின் இணைப்பிற்கான ஆணையினை வழங்கினார்
சாதாரண முன்னுரிமை திட்டம் கீழ் 1205 விவசாய விண்ணப்பத்தாரர்களுக்கு 582 நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 14.10.2021 வரை 34 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1171 விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கைள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
சுயநிதி திட்;டம் (ரூ.10,000) கீழ் பதிவு செய்யப்பட்ட 25 விவசாய விண்ணப்பதாரர்களில் 14.10.2021 வரை ஒரு விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுயநிதி திட்டத்தின் (ரூ.25,000) கீழ் பதிவு செய்யப்பட்ட 2024 விவசாய விண்ணப்பதாரர்களில் நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. சுயநிதி திட்டம் (ரூ.50,000) கீழ் பதிவு செய்யப்பட்ட 1 விவசாய விண்ணப்பதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவு சுயநிதி திட்டம் (தட்கல் 2020 – 21) இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 93 விவசாய விண்ணப்பதாரர்களுக்கு 90 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 3 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவு சுயநிதி திட்டம் (தட்கல் 2021-22) இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 170 விவசாய விண்ணப்பதாரர்களில் 10 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 160 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு திட்டம் தாட்கோ பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், முன்னாள் படைவீரர், விதவை, உடல் ஊனமுற்றோர், மலைவாழ் மக்கள் ஆகிய 117 விவசாய மின் இணைப்பு விண்ணப்பதாரர்களின் 35 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 82 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இந் நிகழ்ச்சியில் சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.முருகேஷ். நாடாளுமன்ற உறுப்பினர் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), .பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), மேற்பார்வை பொறியாளர் பூ.காளிமுத்து (திருவண்ணாமலை) மாவட்ட ஊராடசிக்குழுத் துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.