ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் தெடார் மின்வெட்டை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடத்தில் தொடர் மின்தடைக்கான சரியான காரணத்தை மின்வாரியம் தெரிவிப்பதில்லை. கேட்டாலும் சரியான பதில் இல்லை. மின்தடை செய்வது குறித்து செய்திதாள்கள் மூலம் முன்அறிவிப்பு செய்வதுமில்லை. இதனால் புதுமடம் மக்கள் மின்தடையால் தொடர் அவதிபட்டு வருகின்றனர். இந்த தொடர்மின்தடை கண்டித்து புதுமடத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் செய்யது இபுராகிம் கண்டன உரையாற்றினார்.

முன்னாள் மாவட்ட செலயாளர் அஜ்மல் சரீப்  பேசினார். மாவட்ட துணைத்தலைவர் சோமு மாவட்ட பொருளாளர் முகம்மது சபீக், மாவட்ட தொகுதி நகர் கிளை நிர்வாகிகள் பிற கட்சியினர், ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் வரவேற்றார். மண்டல அமைப்பு செயலாளர் முகம்மது யாசின், விடுதலை சிறுத்தை கட்சி முகம்மது யாசின், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகராஜன் உட்பட நுாற்றுகணக்கானோர் பங்கேற்றனர். தொடர் உண்ணாவிரத போராரட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆவேசத்துடன் பேசியதை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கே வந்து நிர்வாககளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இனி மின்தடை வராத வகையில் பார்த்துக்கொள்கிறோம் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.  புதுமடம் கிளை தலைர்  அகம்மது பசீர் நன்றி கூறினார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here