திருவள்ளூர் வெள்ளவேடு காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொத்தியம் பாக்கம் கிராமத்தில் நான்கு வயது பெண் குழந்தையின் சந்தேக மரண வழக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில் நடந்த தீவிர விசாரணையில் கொலையென கண்டுப்பிடித்து கொலையாளியை சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்;ஜூலை,19- திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தியம்பாக்கம் கிராமத்தில் உள்ள எஸ்.கே.எம். கான்கீரிட் ப்ளே ஆஸ் பிரிக்ஸ் கம்பெனியில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வருபவர் அமித் வயது –35 இவர் ஒடிசா மாநிலத்தைச் தேர்ந்தவர். இவரது மகள் 4 வயது பெண் குழந்தை திருவேனி (எ) இசானி என்ற என்பவர் கடந்த 14.07.2019 அன்று தங்களுடன் தங்கி இருக்கும் நபர்களுடன் வெள்ளவேடு பஜாருக்கு சென்றவர் திரும்பி வரவில்லை எனவும், பிறகு அக்கம் பக்கத்தில் தேடியபோது 15.07.2019 அன்று காலை மேற்படி கம்பெனி மதில் சுவர் அருகில் இறந்து கிடந்ததாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டு குழந்தையின் உடலைக் கைப்பற்றப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு சோதனைக்கு அனுப்பபட்டு. சோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. விக்கப்பட்டது. இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, திருவள்ளூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், வெள்ளவேடு காவல் ஆய்வாளர் தொடர் விசாரணை மேற்கொண்டதில் இம்மரணம் இயற்கையாக நிகழவில்லை என்றும் கொலை செய்யப்பட்டு இறந்து போயிருக்க கூடும் எனவும் சாட்சியங்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தெரியவந்தது. சாட்சியங்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் குழந்தையை அதே குடியிருப்பின் அருகில் வசித்து வந்த நிராகர் தண்டசேனா வயது 22 தபெ காசிராம் தண்சேனா, கலியகுண்டலா, பலிக்கியா, காலாஹந்தி, ஒடிசா மாநிலம் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் 14.07.2019 அன்று மாலை சுமார் 4 மணியளவில் குழந்தையை நிராகர் பஜாருக்கு அழைத்து சென்றதாகவும் மறுபடியும் சுமார் 6 மணியளவில் குழந்தையை மீண்டும் நிராகர் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள ஸ்ரீராம் ஆட்டோ கேரேஜ் அருகில் உள்ள பாலத்தின் கைப்பிடி சுவரின் மீது உட்காரவைத்துவிட்டு பக்கோடா சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த குழந்தை நிராகரை தொல்லை செய்தாதகவும் அத்தோடு அந்த குழந்தை இடது கையின் தோள்பட்டையில் கடித்து விட்டதாகவும் அதனால் நிராகருக்கு வலியுடன் வீக்கம் ஆனதாகவும் அதனால் கோபப்பட்டு இசானியை கன்னத்தில் அடித்ததாகவும் அதன் காரணமாக அவள் கைப்பிடி சுவறிலிருந்து கிழே பத்தடி ஆழத்தில் கால்வாயில் விழுந்து விட்டதாகவும் உடனே நிகார் போய் பார்த்தபோது இடது கன்னத்தில் சிராய்ப்பு காயத்துடன் கீழே இருந்த கல் குழந்தையின் உடலில் பட்டு அங்கங்கு சிறுசிறு காயங்களுடன் குழந்தை மூச்சுபேச்சின்றி இருந்ததாகவும் குழந்தையின் சுவாசத்தை பார்த்தபோது குழந்தை இறந்து போய் விட்டதாக தெரியவந்தது. அதன் பின்பு நிகார் குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து போனல் எதாவது செய்து விடுவார்கள் என்பதால் பயந்து குடியிருந்த குடியிருப்பின் பின்பக்கமாக காம்பவுண்ட் சுவரை ஒட்டியிருந்த கால்வாயில் தூக்கி போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் சென்று விட்டதாகவும் தெரிய வந்ததின் அடிப்படையில். இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி நிகாரை கைது செய்து கடந்த 17.07.2019 ஆம் தேதி நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.