மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் கீழ முக்கூட்டு பகுதியில் அதிமுக சார்பில் திருமண பேனர் சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே மறு தினமே பேனர் கிழிக்கப்பட்டு அருகே தூக்கி வீசப்பட்டிருந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அதே பகுதியில் அம்மா பிறந்தநாள் தொடர்பான பேனர் அதிமுக சார்பில் நேற்று வைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறி காவல் துறையினர் மறுநாள் பேனரை அவிழ்த்து கீழே இறக்கி வைத்தனர்.
அதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் கீழ முக்கட்டு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டு சென்றனர். அத்தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் மாவட்ட செயலாளர் பவுன்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேனர் அதே பகுதியில் பேனர் வைக்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து காவல்துறையில் கேட்டபோது பேனர் வைப்பதற்கு விதிமுறைகள் அனைத்து கட்சியினருக்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் , நிகழ்ச்சி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அனுமதி பெற்று பேனர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் , அதிமுகவினர் உரிய அனுமதி பெறாததால் பேனர் அப்பகுதியில் இருந்து காவல் துறையால் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்கு பேனர் வைப்பதாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்று வைக்க வேண்டும் என காவல்துறையினர் அனைத்துக் கட்சியினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும்.அறிவுறுத்தியுள்ளனர்.