கன்னிகாபுரம், ஜன. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளை அவ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் உள்ள வறுமையின் காரணமாக கல்வி மருத்துவம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.மேலும் அவ் அறக்கட்டளைத் தலைவராக குருமாயி சாந்தம்மாள் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் எதிர் வரும் தை திருநாளை முன்னிட்டு, கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாகல்மேடு கிராமத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொங்கலுக்கு தேவையான 11 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்கினார்கள்.
அதில் எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாலவாக்கம், பூரிவாக்கம், திருநிலை, அத்திவாக்கம், ஆமிதாநெல்லூர், மஞ்சங்காரணை, இலட்சுவாக்கம், சென்னங்காரணி, பேரண்டூர், செஞ்சிஅகரம், தாராட்சி, தண்டலம், காக்கவாக்கம், தொளவேடு உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 53 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் இந்நிகழ்ச்சி பாகல்மேடு கிராமத்தில் நடைபெற்றது.
மேலும் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக மஞ்சள்தூள், அரிசி, வெல்லம், நெய், எண்ணெய், சிறுபருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், குளியல் சோப்பு, துணி சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளையின் சார்பாக சுவாமி ஸ்ரீ பாதா, சுவாமிநாதன், ரவிகாவ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு 11 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.
தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக அனைவரையும் சமூக சேவகர் டி.கண்ணன் வரவேற்றார். முடிவில், கே.திவ்யா நன்றி கூறினார். அந்த அறக்கட்டளை கடந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கி வந்தனர் அது மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களிலும் ஏழை எளிய மக்கள் கொண்டாட வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் வரும் பொங்கல் விழா நாட்களில் இதுபோன்று நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் புயல் காரணத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த அறக்கட்டையில் சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பரிசுத்த தொகுப்பினை பெற்றுக் கொண்ட தூய்மை காவலர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை அறக்கட்டளைக்கு தெரிவித்துக் கொண்டனர்.





















