இராமநாதபுரம், செப் . 6 –
இராமநாதபுரம் எல்.ஐ.சி.யின் கிளை சார்பாக இன்சூரன்ஸ் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. எல்.ஐ.சி.,யின் ஊழியர்கள், ஏஜென்ட்டுகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இராமநாதபுரம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து எல்.ஐ.சி., அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.
கிளை முதுநிலை மேலாளர் லட்சுமணன் பேசும்போது, இராமநாதபுரம் எல்.ஐ.சி. கிளை பாலிசிதாரர்கள் சேவையில் சிறந்து விளங்குவதால் பொது மக்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர், என்றார்.
மதுரை கோட்டத்தின் முதுநிலை மேலாளர் செந்துார்நாதன் பேசும்போது, இராமநாதபுரம் கிளை மதுரை கோட்டத்திலேயே புது வணிகத்திலும் சேவையிலும் முதன்மையாக விளங்குவது பாராட்டுக்குரியது, என்றார்.
முன்னதாக பேரணியை ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப் பேரணியில் சாமுவேல், வளர்ச்சி அதிகாரி மணிகண்டன், முதன்மை ஆலோசகர் அருள்ஜோதி, முகவர்கள் செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, கர்ணன், மூர்த்தி, சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை உதவி மேலாளர் சிவக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார். ராமேஸ்வரம் கிளை மேலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.