கபிஸ்தலம், மார்ச். 26 –

கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சித்திரைவேல் மகன் 27 வயதுடைய பிரகதீஸ்வரன், மேலும், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை, மேலும் பிரகதீஸ்வரன் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு கணபதி அக்ரஹாரத்தில் பணிக்கு சென்ற அவர் பணிமுடிந்து, அங்குயிருந்து இரு சக்கர வாகனத்தில் வாழ்கை எனும் கிராமம் நோக்கி வந்துக்கொண்டிந்த போது, ஆடுதுறை பெருமாள் கோவில் அருகில் எதிரே மருத்துவகுடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வல்லத்திற்குச் சென்ற லாரி பிரகதீஸ்வரனின் இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராதமாக மோதியதாக தெரிய வருகிறது.

மேலும் இவ்விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பிரகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த கபிஸ்தலம் காவல்நிலைய ஆய்வாளர் அனிதா கிரேசி, தனி பிரிவு காவலர் ராகுல், ஆகியோர் பிரகதீஸ்வரன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here