ஜெய்ப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட வேலைகளில் முழு மூச்சாக உள்ளன.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என மாநில தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநில தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 8ம் தேதி நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு விடும்.
கட்சி தொண்டர்களின் விருப்பம், வேட்பாளரது வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்து வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.