திருவண்ணாமலை, ஆக.19-
இருதய நோய் (சிவிடி) முதன்மையாக இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும் இது ஆண்டுதோறும் 17.7 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாகிறது. கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம் இதயநோய் மற்றும் தொடர்புடைய இறப்புகளுக்கு முக்கிய காரணமாகிறது. இந்த இறப்புகளில் 5ல் ஒரு பங்குக்கும் அதிகமானவை இந்தியாவில் இருப்பதாக டபிள்யு.எச்.ஒ மதிப்பிடுகிறது.
கோவிட் 19 ன் கொடிய 2வது அலை, சிகிச்சை அளிக்கப்படாத மற்றும் நிர்வகிக்கப்படாத உயர் ரத்த அழுத்தமானது ஏற்கனவே நோய்வாய் பட்டிருக்கும் இந்திய மக்களை மேலும் பாதிப்படைய செய்யும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து டாக்டர் வி.மோகன், நீரிழிவு சிறப்பு மைய டாக்டர் மோகன் கூறுகையில் இந்தியா தற்போது இரட்டை தொற்றுநோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை எதிர் கொள்கிறது. இந்தியாவில் உள்ள பிரச்சனைகளில் ஒன்று வெள்ளை ஐரோப்பியர்களை விட மிகவும் இளைய வயதினரிடையே 2ம் ஏற்படுகின்றனர். கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு ஒரு தீவிர ஆபத்து காரணி இந்தியர்கள் உயர் அழுத்த ரத்தம் மற்றும் முன் கூட்டியே கரோனரி தமனி நோயால் பாதிக்கப் படுகின்றனர். கண்டறியப் படாத உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து கண்டறியப் பட்டவர்களுக்கு சிகிச்சையை தொடங்கவும் சிகிச்சை அளிக்கப் பட்டவர்களுக்கு ரத்த அழுத்த இலக்குகள் அடையப்படுவதை காணவும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை இந்தியாவில் தொடங்குவது மிக முக்கியம். இது இந்தியர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்கும் என்றனர்.
இந்தியர்கள் தினசரி பரிந்துரைக்கப் படும் உப்பின் வரம்பை மீறி அதிகமாக உட் கொள்கிறார்கள். மற்றும் இந்த உப்பு பெருமளவில் பதப்படுத்தப் பட்ட உணவில் இருந்து வருகிறது. உப்பு, உயர் ரத்த அழுத்தத்திற்கு கடுமையான ஆபத்து காரணியாக இருக்கும் நிலையில் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது மனிதர்களின் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் இந்த முக்கியமான பிரச்சனையை உணர்ந்து மாநில அரசு ட்ரான்ஸ் கொழுப்பு விதிமுறைகளை தீவிரமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் என சிட்டிசன் கன்ஸ்யூமர் அன்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் நிர்வாக இயக்குநர் எஸ்.சரோஜா தெரிவித்துள்ளார்.