பொதட்டூர்பேட்டை, மார்ச். 08 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நொச்சிலித்தொட்டி காலனியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன் லாரன்ஸ் வயது 6 சம்பவ நாளான கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று காலை எட்டு மணியளவில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி அருகே உள்ள சாலையில் சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக அத்திமாஞ்சேரிப்பேட்டை நோக்கி வந்த சரக்கு வாகன ஆட்டோ வேகமாக வந்து சிறுவன் லாரன்ஸ் மீது மோதியதால் அவர் கீழே விழுந்துள்ளார். அதில் தலையில் அவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது..
இதனைத் தொடர்ந்து அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவ்விபத்துக் குறித்து பொதட்டூர்பேட் காவல் நிலையத்தில் லாரன்ஸின் பெரியப்பாவும் வெங்கடேசின் அண்ணனுமான கன்னியப்பன் வேகமாகவும் கவனக் குறைவாகவும் வாகனத்தை ஓட்டி வந்து சிறுவன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் மிது நடவடிக்கை எடுக்கும் படி நேற்று புகார் மனு அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மற்றும் தொடர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















