கும்மிடிப்பூண்டி, ஏப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள காயலார்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயமாகும். அவ்வாலயத்தின் நூதன அஸ்டதபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

அவ்விழாவின் துவக்கமாக கடந்த 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து 21ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 9 மணியிலிருந்து 5 மணிக்குள் அம்மனின் சன்னிதானத்தில் விக்னேஸ்வர பூஜை, லட்சுமி கணபதி ஹோமம், நவகிரக ஓமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்புமிக்க பூஜைகள் நடத்தப்பட்டு 22 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் மஹா கும்பாபிஷேக விழாவானது இரண்டாம் கால யாகசால பூஜை நடத்தப்பட்டு விசேஷ திவ்ய ஹோமங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்றுது.

விமான கோபுரத்தின் மீது பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு பின்பு .   பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்பொழுது பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷங்களுடன் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறுசுவை உணவு மற்றும் அருள் பிரசாதங்களும் வழங்கப்பட்டது, மேலும் அந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், கும்மிடிப்பூண்டி சேர்மன் கே.எம்.எஸ்.சிவக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், தொழிலதிபர்கள் ஏகாம்பரம், என்.ஆர்.கே. தாஸ், ஐய்யபன், வெங்கடேசன், ஆர்.எம். எஸ்.குட்டி, கவுன்சிலர் ஜெயச்சந்திரன், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ், தொழிலதிபர் ப்ரொபஷனல் பிரபு, கோகுல், சௌந்தரி மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர்கள் கோட்டை குணா, கோங்கல் விமல், ஏனாதி மேல்பாக்கம் சுகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here