மீஞ்சூர், செப். 24 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சாணார்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது மஸ்த் எனும் தனியார் தொழிற்சாலை நிறுவனம். இங்கு துறைமுகத்தில் இருந்து கண்டைனர்கள் மூலம் கொண்டு வரும் பொருட்களை முறைப்படுத்தி உரிமையாளர்களிடம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிறுவனத்தில் பொன்னேரி தடப்பெரும்பாக்கம் ஊராட்சி சிங்கிலி மேடு பகுதியை சேர்ந்த குமரன் (40) என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் குமரன் கடந்த 20 ஆம் தேதி பணிக்கு வந்தவர் வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் குமரனின் உறவினர்கள் தொழிற்சாலையின் நிர்வாக அலுவலர்களிடம் கேட்ட போது  நிர்வாகத்தின் சார்பில் எந்தவிதமான சரியான தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து குமரனின் உற்றார் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும், கேட்டும் தகவல் தெரிய வராதநிலையில் குமரன் ரயிலில் அடிபட்டு இறந்த தகவல் உறவினர்களுக்கு கிடைக்க அவர்கள் விரைந்து சென்று கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினரை அணுகி குமரனின் உடலை வாங்கி வந்து தொழிற்சாலையின் முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குமரனின் உறவினர்கள் தொழிற்சாலை நிர்வாகத்தின் அதிக பணிசுமை அழுத்தத்தின் காரணமாகவே, மனஉளைச்சலில் இருந்த குமரன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குற்றம் சாட்டி நிர்வாகத்திடம் இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி பொறுப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள் மேலும் சந்தேகத்தின் பேரில் கம்பெனியில் உள்ள ஜெய், பிரதீப் என்ற இருவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த  தொழிற்சாலையின் வாசல் அருகே போலீசாரின் வாகனம் நின்று கொண்டிருந்த போது, வாகனத்திலிருந்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒருவர் டிஎஸ்பி கண் எதிரேயே தப்பியோடி கம்பெனிக்குள் ஓடி ஒளிந்தார்.

அவரை மீண்டும் காவல்துறையினர் அரைமணி நேரம் தேடி கண்டுபிடித்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here