திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா ஆய்வு செய்தார். தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொளமஞ்சனூர் ஊராட்சியில் தடுப்பணை மாதிரிப் பள்ளி, நாராயணகுப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுதல் விதைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்பணிகளை உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்துமுடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஆணையாளர் கே.நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) கே.பி.மகாதேவன், ஒன்றிய உதவி பொறியாளர சிவக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் நக்கீரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துலட்சுமி முருகேசன், ரமேஷ், ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் தருமன், ஊராட்சி செயலாளர்கள் வெங்கடேசன், சென்னன், பழனி உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.



















