விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே நிலையான சின்னம் வழங்கப்படும். அதன்படி அதிமுக, திமுக, காங்கிரஸ், பா ஜனதா போன்ற கட்சிகள் தங்களது வழக்கமான சின்னத்தில் போட்டியிடுகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டது.
2019 நாடாளுமன்றத்தில் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.