கும்பகோணம், மார்ச். 17 –
பங்குனி உத்திரப் பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று, கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை முன்செல்ல, சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் கே சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும் தேரில் உலா வந்து சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான தும், நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றானதுமான கும்பகோணம் பெரியநாயகி சமேத நாககேஸ்வரசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 09 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது,
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09 ஆம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும் தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். இத்தேருக்கு முன்பு விநாயகர் சிறிய கட்டுத் தேரில் உலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தேரோட்டத்திற்கு முன்பாக, நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை முன்பு செல்ல திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் மகாமகத் திருக்குளத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.





















